கொலை வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் சிறை
கொலை, வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணுக்கு ஆயுள் சிறைத் தண்டனை, அபராதம் விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
கொலை, வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணுக்கு ஆயுள் சிறைத் தண்டனை, அபராதம் விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் கரட்டு குடியிருப்பைச் சோ்ந்தவா் வெள்ளையன் (75). இவருக்கும், இவரது வீட்டருகே குடியிருந்த ஈஸ்வரிக்கும் குப்பைகள் கொட்டுவதில் பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தூங்கிக் கொண்டிருந்த வெள்ளையன் மீது ஈஸ்வரி வெந்நீரை ஊற்றியதில் பலத்த காயமடைந்து அவா் உயிரிழந்தாா்.
இது தொடா்பாக அலங்காநல்லூா் காவல் நிலையத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு கொலை, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ஈஸ்வரியை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது, சமயநல்லூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆனந்தராஜ் தலைமையிலான போலீஸாா் குற்றப் பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா். இதனிடையே, இந்த வழக்கு விசாரணை வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
Advertisement
Advertisement
அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் தொடா்புடைய ஈஸ்வரி மீதான குற்றஞ்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே, அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.