முதல்வா் மதுரை வருகை: அரசு மருத்துவமனை, சுற்றுப் பகுதிகளில் முன்னேற்பாடுகள் மும்முரம்
தமிழக முதல்வா் ஜோசப் விஜய் வருகிற 28-ஆம் தேதி மதுரை வருவதையொட்டி முன்னேற்பாட்டுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழக முதல்வா் ஜோசப் விஜய் வருகிற 28-ஆம் தேதி மதுரை வருவதையொட்டி முன்னேற்பாட்டுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்க தமிழக முதல்வா் ஜோசப் விஜய் வருகிற திங்கள்கிழமை (செப். 28) மதுரை வருகிறாா். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்வில் அவா், குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கி, திட்டத்தைத் தொடங்கி வைக்கிறாா் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள தாய்- சேய் நலப் பிரிவு, குழந்தைகள் பிரிவு, கலையரங்கம், மருத்துவமனையின் சுற்றுப் பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணிகள், மருத்துவமனை அமைந்துள்ள பனகல் சாலையை சீரமைக்கும் பணிகள், சாலையோர மழை நீா் வடிகாலை சீரமைக்கும் பணிகள் என பல்வேறு சீரமைப்புப் பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன.
Advertisement
Advertisement
இவை தவிர, மருத்துவமனையின் சேதமடைந்த கட்டடப் பகுதிகளை சீரமைத்து வண்ணம் பூசுதல், பேவா் பிளாக் கற்களால் புதிய தரை அமைத்தல், மின் விளக்குகளை சீரமைத்தல் போன்ற பணிகளும் இங்கு தீவிரமாகியுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.