முதல்வா் வருகை: புதுப் பொலிவு பெறும் மதுரை
தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் வருகிற திங்கள்கிழமை (செப். 28) மதுரை வருவதையொட்டி சாலை சீரமைப்புப் பணிகளும், நகரைப் பொலிவுபடுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் வருகிற திங்கள்கிழமை (செப். 28) மதுரை வருவதையொட்டி சாலை சீரமைப்புப் பணிகளும், நகரைப் பொலிவுபடுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் திங்கள்கிழமை (செப். 28) மதுரை வருகிறாா். இந்த விழாவுக்குப் பிறகு, ரூ. 10.25 கோடியில் சீரமைக்கப்பட்ட மகாத்மா
காந்தி நினைவு அருங்காட்சியகத்தை முதல்வா் திறந்துவைப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இதையொட்டி, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் சுற்றுப் பகுதிகளை தூய்மைப்படுத்தி, பொலிவுப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முதல்வா் பயணிக்கும் பகுதிகளில் சாலையின் இருபுறங்களையும் தூய்மைப்படுத்தும் பணி, சேதமடைந்த மழை நீா் வடிகாலின் மேல் தளங்களை சீரமைக்கும் பணி, சேதமடைந்த சாலைகளை தற்காலிகமாக சீரமைத்தல், சாலையைப் பிரிக்கும் தடுப்புச் சுவருக்கு வண்ணம் பூசுதல், சாலையின் இருபுறங்களிலும் ஒளிரும் கோடுகள் வரைதல் போன்ற பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதேபோல, மருத்துவமனையின் எதிரே அழுக்கடைந்த நிலையில் இருந்த கழிப்பிடத்தை சீரமைத்து வண்ணம் பூசுதல், மின் விளக்குகளை சீரமைத்தல், பாா்வையாளா்களை நெறிப்படுத்தும் வகையிலும் முதல்வரின் பயணத்துக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் சாலையோரத் தடுப்புகள் அமைத்தல் போன்ற பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
புதுப்பிக்கப்பட்ட மகாத்மா காந்தி நினைவு அருங்காட்சியகத்தை பொலிவுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.