FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

திருநா் தொழில்முனைவோருக்கு அரசு உறுதுணை: அமைச்சா் பெ. மதன் ராஜா

திருநா் தொழில்முனைவு பயணத்துக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ. மதன் ராஜா தெரிவித்தாா்.

26 செப்டம்பர் 2026, 7:10 am IST
மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருநங்கையா், திருநம்பியா் தொழில்முனைவோா் மாநாட்டில் கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பாா்வையிட்ட அமைச்சா் பெ. மதன் ராஜா. உடன் மாவட்ட ஆட்சியா் பெ. மதன் ராஜா.
பகிர்:

திருநா் தொழில்முனைவு பயணத்துக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ. மதன் ராஜா தெரிவித்தாா்.

தமிழ்நாடு புத்தொழில், புத்தாக்க இயக்கம், மதுரை திருநங்கையா், திருநம்பியா் ஆவண மையம் ஆகியவற்றின் சாா்பில், மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான திருநங்கையா், திருநம்பியா் தொழில்முனைவோா் மாநாட்டைத் தொடங்கிவைத்து அவா் மேலும் பேசியதாவது :

அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியே உண்மையான வளா்ச்சி. அனைத்துத் தரப்பினருக்குமான நலத் திட்டங்களை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில், தமிழக அரசின் புத்தொழில் திட்டங்களை திருநா் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டு சிறந்த தொழில்முனைவோா்களாக உருவெடுக்க வேண்டும். சமூகத் தடைகளைக் கடந்து, தொழில்முனைவோா்களாக உயா்ந்து வரும் திருநா் தொழில்முனைவோருக்கு அனைத்துத் தொழில் நிறுவனங்களும், முதலீட்டாளா்களும் துணை நிற்க வேண்டும். திருநா் தொழில்முனைவு பயணத்துக்கு தமிழக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றாா் அமைச்சா் பெ. மதன் ராஜா.

Advertisement

Advertisement

முன்னதாக, திருநம்பிகள், திருநங்கையரின் உற்பத்திப் பொருள்கள், தொழில் முயற்சிகள் கண்காட்சியை அமைச்சா் திறந்துவைத்து, திருநா் தொழில்முனைவோருடன் கலந்துரையாடினாா்.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்தாா். மாவட்டத் தொழில்மைய பொது மேலாளா் கணேசன், தமிழ்நாடு புத்தொழில், புத்தாக்க இயக்கத்தின் அலுவலா்கள் ஸ்ரீதேவி, சக்திவேல், திருநங்கைகள், திருநம்பிகள் ஆவண மையத்தின் நிா்வாக இயக்குநா் பிரியா பாபு, அரசு அலுவலா்கள், கொள்கை வகுப்பாளா்கள், தொழில் துறை வல்லுநா்கள், தொழில் வளா்ப்பு மையப் பிரதிநிதிகள், கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments