FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் சதுர்த்தி: பூக்குழித் திருவிழா

திருவாடானை தாலுகா தொண்டி அருகே உப்பூரில் உள்ள வெயிலுகந்த விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவையொட்டி, பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

திருவாடானை தாலுகா தொண்டி அருகே உப்பூரில் உள்ள வெயிலுகந்த விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவையொட்டி, பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
      ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்துக்குப் பாத்தியப்பட்ட இக்கோயில், ராமபிரான் சீதையை மீட்க இலங்கை செல்லும் முன் இந்த விநாயகரை வணங்கி விட்டுச் சென்றதாக புராண வரலாறு உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழாவின், முக்கிய நிகழ்ச்சியான சித்தி புத்தி திருக்கல்யாணம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.    அதைத் தொடர்ந்து, புதன்கிழமை மாலை தேரோட்டம் நடைபெற்றது. வியாழக்கிழமை, பக்தர்கள் அருகே உள்ள மோர்பண்ணை கிராமத்தில் கடலில் புனித நீராடி பக்தர்கள் பால்குடம், மயில் காவடி, வேல் காவடி, பறவைக் காவடி எடுத்து வந்து பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    இரவு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை, சமஸ்தான தேவஸ்தான நிர்வாகச் செயலர் பால்பாண்டியன், சரகப் பொறுப்பாளர் மகேந்திரன் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments