கோயில் திருவிழாவில் நகை திருடிய 2 பெண்கள் பிடிபட்டனர்
ராமநாதபுரம் அருகே புதன்கிழமை கோயில் கும்பாபிஷேக விழாவில் நகை திருடியதாக பெங்களூருவைச் சேர்ந்த 2 பெண்களைப்
ராமநாதபுரம் அருகே புதன்கிழமை கோயில் கும்பாபிஷேக விழாவில் நகை திருடியதாக பெங்களூருவைச் சேர்ந்த 2 பெண்களைப் போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் அருகே உள்ள மூணுவலசை கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமியின் மனைவி அம்மாளு(70). ராமநாதபுரம் அருகே வழுதூரில் உள்ள காமாட்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகத்தை பார்க்கச் சென்றிருந்தார்.அப்போது கூட்ட நெரிசலில் அவர் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை பெண்கள் இருவர் துண்டித்து எடுக்க முயன்றதை பார்த்த சிலர், அந்தப் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் தெரிவித்தனர்.
உடனடியாக கேணிக்கரை காவல் ஆய்வாளர் செந்தில்குமரன் தலைமையிலான போலீஸார் அவ்விரு பெண்களையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள், பெங்களூருவைச் சேர்ந்த ராமராஜ் மனைவி சௌடாம்பாள் (47), ராஜ் மனைவி பாக்கியம் (40) ஆகியோர் என தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக மூதாட்டி அம்மாளு கொடுத்த புகாரின் பேரில் இரு பெண்களையும் போலீஸார் கேணிக்கரை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.