FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ராமநாதபுரம் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல்: பெரும் விபத்து தவிர்ப்பு

ராமநாதபுரம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை உரிய நேரத்தில் ஊழியர் கவனித்து ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து வெள்ளிக்கிழமை காலை தவிர்க்கப்பட்டது.

1 பிப்ரவரி 2024, 3:03 pm IST
பகிர்:

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை உரிய நேரத்தில் ஊழியர் கவனித்து ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து வெள்ளிக்கிழமை காலை தவிர்க்கப்பட்டது.

சென்னை எழும்பூரிலிருந்து ராமேசுவரத்துக்கு பயணிகள் விரைவு ரயில் வியாழக்கிழமை இரவு 7.15 மணிக்குப் புறப்பட்டது. ரயிலானது வெள்ளிக்கிழமை காலை 6.45 மணிக்கு ராமநாதபுரம் ரயில் நிலையம் வந்தடைந்தது. பின் அங்கிருந்து 6.50 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது. ரயிலானது ராமநாதபுரம்-உச்சிப்புளி இடையேயுள்ள வாலாந்தரவை ரயில் நிலையத்தை காலை சுமார் 7.20 மணியளவில் நெருங்கியது.

அப்போது வாலாந்தரவை ரயில்வே கேட் ஊழியர் வீரப்பெருமாள் தண்டவாளத்தை சரிபார்த்து வந்துள்ளார். ரயில்வே கேட் அருகில் சுமார் 300 மீட்டர் தொலைவில் தண்டவாளத்தின் ஒரு பகுதியில் சுமார் 8 சென்டி மீட்டர் அகலத்துக்கு விரிசல் இருப்பது தெரியவந்தது. விரிசல் கண்டறியப்பட்ட நிலையில் பயணிகள் விரைவு ரயிலும் அப்பகுதியை நெருங்கி வந்தது. உடனே தான் வைத்திருந்த சிவப்புக் கொடியை காட்டியபடி தண்டவாளத்தில் 200 மீட்டருக்கு ஊழியர் வீரப்பெருமாள் ஓடினார். அதைக் கண்ட ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயற்சித்தார்.

Advertisement

Advertisement


அதனால், ரயில் மெதுவாக வந்து விரிசலைக் கடந்து நின்றது. தகவல் அறிந்த மண்டபம் ரயில் நிலைய ஊழியர்கள் விரைந்து வந்து தண்டவாள விரிசலை சீர்படுத்தினர். அதன்பின் ரயிலானது சுமார் ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு புறப்பட்டுச் சென்றது. ரயில் தக்க நேரத்தில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ரயிலை விபத்திலிருந்து தவிர்க்கும் வகையில் செயல்பட்ட ஊழியர் வீரப்பெருமாளை பொதுமக்களும், பயணிகளும் பாராட்டினர்.

கடந்து சென்ற ரயில்கள் விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தை வெள்ளிக்கிழமை அதிகாலை 2 ரயில்கள் கடந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. ஆகவே விரிசல் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்படுவதாக அதிகாரிகள் கூறினர். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தண்டவாளம் சீரமைப்புப் பணியானது நவீன இயந்திர வாகனத்தைக் கொண்டு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments