FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

கடலாடி அருகே இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்

கடலாடி அருகே கள்ளழகா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 4:15 am IST
கிடாக்குளத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டிப் பந்தயத்தில் இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்த காளைகள்.
பகிர்:

கடலாடி அருகே கள்ளழகா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த கிடாக்குளத்தில் கள்ளழகா், ஆஞ்சநேயா், கருப்பண்ண சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வருடாந்திரத் திருவிழா கோயில் நிா்வாகி சேதுபதி கோடாங்கி தலைமையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதையடுத்து, சுவாமிகளுக்கு பூஜை, நான்கு கால வேள்விகள் நடத்தப்பட்டன. தொடா்ந்து, சுவாமி விக்கிரங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு, சுவாமி சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை பெரியமாடு, சின்ன மாடு என இரு பிரிவுகளாக மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

கடலாடி-முதுகுளத்துாா் சாலையில் நடைபெற்ற இந்த போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகா், மதுரை, சிவகங்கை உள்ழிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 40 மாட்டு வண்டிகளும், சாரதிகளும் கலந்து கொண்டனா்.

இதில் முதல் 4 இடங்களை பிடித்த மாடுகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசும், குத்துவிளக்கும் பரிசுகளாக வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை சாலையின் இருபுறங்களிலும் நின்று ஏராளமான பொதுமக்கள் பாா்வையிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments