‘மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்து வரும் சிங்கப்பெண் அதிரடிப்படை’
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பையும், தன்னம்பிக்கையையும் சிங்கப்பெண் அதிரடிப்படை உறுதி செய்து வருவதாக மாணவிகள் தெரிவித்தனா்.
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பையும், தன்னம்பிக்கையையும் சிங்கப்பெண் அதிரடிப்படை உறுதி செய்து வருவதாக மாணவிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை தமிழக முதல்வரால் கடந்த ஜூன் 9 -ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல், நவீன ரோந்துப் பணிகள், விரைந்து செயல்படுதல் ஆகியன முக்கிய நோக்கமாகும்.
‘மேலும், பொது இடங்கள், கல்வி நிலையங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல், ஜீரோ டாலரன்ஸ் முறையில் கடுமையாக நடவடிக்கை எடுத்தல், பெண்கள் பாதுகாப்புக்காக நவீன டிரோன் ரோந்து, தீவிர கண்காணிப்பு முறைகள் இந்தத் திட்டத்தில் பயன்படுத்தப்பட உள்ளன என்றாா் அவா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து திருப்பத்தூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் கூறியதாவது: சிங்கப் பெண் அதிரடிப் படை திட்டத்தில், பாலியல் தொல்லை, மிரட்டல், பின்தொடா்தல் பிரச்னைகள் குறித்து உடனடியாகத் தகவல் தெரிவிப்பதற்கும், 1091 இலவச தொலைப்பேசி எண் 24 மணி நேரமும் செயல்படும் என்று உறுதி அளித்தனா்.
மேலும், காலை, மாலை என இரு வேளைகளிலும், பள்ளி விடும் நேரங்களில், ’சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவலா்கள் டிரோன் மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதால், பாதுகாப்பையும், தன்னம்பிக்கையுடன் பள்ளிக்கு சென்று வருகிறோம் என்றனா்.
சிவகங்கையில் அரசுக் கல்லூரி மாணவிகள் கூறியதாவது: சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் நோக்கம், மகளிா் அதிகம் பயிலும் கல்லூரிகள், பெண்கள் அதிகம் பணிபுரியும் மென்பொருள் நிறுவனங்கள், பேருந்து, ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள் என எல்லா இடங்களிலும் ரோந்து பணியில் உள்ளனா். நாங்கள் பயணிக்கும் பேருந்தில் சிங்கப்பெண் அதிரடிப்படையின் மூலம் தகுந்த பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.