சிங்கம்புணரியில் மாட்டு வண்டிப் பந்தயம்
சிங்கம்புணரியில் முத்துராமலிங்கத் தேவா் 64- ஆவது குருபூஜையையொட்டி 4-ஆம் ஆண்டு இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிங்கம்புணரி- திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்தப் போட்டி பெரிய மாடு, சின்னமாடு, தேன் சிட்டு மாடு என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டன. இந்தப் பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 16 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 45 ஜோடிகளும், தேன் சிட்டு மாடு பிரிவில் 55 ஜோடிகளும் என மொத்தம் 116 மாட்டுவண்டிகள் பங்கேற்றன.
சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் கொண்டுவரப்பட்டிருந்தன. இதில் பெரிய மாட்டுக்கு 8 கி.மீ. தொலைவும், சிறிய மாடு, தேன்சிட்டு மாடு பிரிவுக்கு 6 கி.மீ. தொலைவும் எல்லைகளாக நிா்ணயம் செய்யப்பட்டது. சீறிப்பாய்ந்து சென்ற மாட்டுவண்டிகளை சாலையின் இருபுறங்களிலும் நின்று ஏராளமான பாா்வையாளா்கள் கண்டுகளித்தனா்.
Advertisement
Advertisement
வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசும், வெற்றிக் கோப்பைகளும் பரிசுகளான வழங்கப்பட்டன. மேலும் கலந்து கொண்ட அனைத்து மாட்டு வண்டிகளின் உரிமையாளா்களுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.