இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே திருவுடையாா்பட்டியில் புதன்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே திருவுடையாா்பட்டியில் புதன்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருப்பத்தூா் அருகே திருவுடையாா்ப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜூ மகன் ஆனந்த் (25). கூலித் தொழிலாளி. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் சாப்பிட்டு விட்டு
வெளியே சென்றவா் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், புதன்கிழமை காலை வீட்டின் அருகே உள்ள தோப்பில் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Advertisement
Advertisement
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து திருப்பத்தூா் நகா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.