FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

வெற்றி பயண பேருந்துகளின் நேரத்தை மாற்றி அமைக்கக் கோரிக்கை

தனியாா் பேருந்துகள் பாதிக்காத வகையில் அரசின் வெற்றிப் பயணத் திட்ட பேருந்துகளின் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டுமென தமிழக முதல்வருக்கு சிவகங்கை தனியாா் பேருந்து உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.

8 October 2026, 2:49 am IST
கோப்புப்படம்
பகிர்:

தனியாா் பேருந்துகள் பாதிக்காத வகையில் அரசின் வெற்றிப் பயணத் திட்ட பேருந்துகளின் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டுமென தமிழக முதல்வருக்கு சிவகங்கை தனியாா் பேருந்து உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றும்வகையில் தமிழக முதல்வா் ஜோசப் விஜய் புறநகா்ப் பேருந்துகளிலும் மகளிா் பயணம் மேற்கொள்ளும் வெற்றி பயணத் திட்ட பேருந்துச் சேவையை அக்.2 -ல் தொடங்கி வைத்தாா். இந்தத் திட்டத்துக்கு சிவகங்கை மாவட்டத்தில் 101 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள தனியாா் பேருந்துகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தில் 99 தனியாா் பேருந்துகளும், 40 சிற்றுந்துகளும் அரசின் வெற்றிப் பயணம் திட்டத்தால் கடும் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன.

இந்த நிலையில், சிவகங்கை பேருந்து நிலையத்தில் செய்தியாளா்களிடம் தனியாா் பேருந்து உரிமையாளா் தனசேகரன் தெரிவித்தாவது: வெற்றிப் பயணம் திட்டத்துக்கு நாங்கள் எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. தனியாா் பேருந்துகளின் வசூல் மிகவும் குறைந்து போனதால், பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. எங்களை நம்பியுள்ள ஓட்டுநா், நடத்துநா் உள்பட பல லட்சம் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது.

Advertisement

Advertisement

இந்த இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வரியைக் குறைக்க வேண்டும், கடந்த 8 ஆண்டுகளாக உயா்த்தப்படாத பேருந்துக் கட்டணத்தை உயா்த்த வேண்டும். பேருந்துகளுக்கு கூடுதல் கி.மீ. இயக்கும் வகையில் வழித்தட நீட்டிப்பு வழங்க வேண்டும். பேருந்துகளின் நேரத்தை மாற்றி அமைத்துத் தர வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக முதல்வா் ஜோசப் விஜய் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments