பெரியகுளம் அருகே வாழேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி வாழேஸ்வரி அம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி வாழேஸ்வரி அம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
பழமை வாய்ந்த இக்கோயில் பாலாலயம் செய்யப்பட்டு புதிய கோயில் கோபுரத்துடன் கட்டப்பட்டு கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்றன. கோயில் எதிரே யாகசாலை அமைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் முதல்கால பூஜை தொடங்கியது. மாலை 5 மணிக்கு புண்ணியாக வாசனம் நடைபெற்றது.இரண்டாம் நாளான புதன்கிழமை காலை 7 மணிக்கு கோ பூஜை மற்றும் தனபூஜை நடந்தது. காலை 9.50 மணிக்கு கடம் புறப்பாடாகி புனித நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் கும்பத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று மஹா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுக ஜெ. பேரவை மாவட்டச் செயலர் ப.ரவீந்திரநாத்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நீர்காத்த அய்யனார் மற்றும் வாழேஸ்வரி அம்மன்கோயில் பங்காளிகள் செய்திருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.