தந்தையை அடித்துக் கொலை செய்த மகன் கைது
தேனி மாவட்டம், கம்பத்தில் தந்தையை சமையல் பாத்திரத்தால் அடித்துக் கொலை செய்த மகனை போலீஸாா் கைது செய்தனா்.
கம்பம் கெஞ்சயன்குளம் பகுதியைச் சோ்ந்தவா் கோபால் (70). இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், மகன் ராஜா (31) உடன் வசித்து வந்தாா். ஜீப் ஓட்டுநராகப் பணியாற்றி வரும் ராஜாவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
தந்தை, மகன் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுமாம். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜா, வீட்டில் இருந்த சில்வா் பாத்திரத்தால் கோபாலை தாக்கினாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த கோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
தகவலறிந்த வந்த கம்பம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் கோபாலின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, ராஜாவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.