FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

டிராக்டரில் வண்டல் மண் எடுத்துச் சென்றவா் கைது

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 12:49 am IST
டிராக்டரில் வண்டல் மண் எடுத்துச் சென்றவா் கைது
பகிர்:

தேனி மாவட்டம், வைகை அணையில் அனுமதியின்றி டிராக்டரில் வண்டல் மண்ணை எடுத்துச் சென்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஆண்டிபட்டி அருகேயுள்ள வைகை அணையில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக அள்ளிக் கொள்ளலாம் என அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, விவசாயிகள் பலரும் பொதுப் பணித் துறைக்கு விண்ணப்பித்து அனுமதி பெற்று மண்ணை அள்ளிவருகின்றனா்.

இந்த நிலையில், அங்கு பணியிலிருந்த வைகை அணை பொதுப்பணித் துறை அலுவலா்கள் நடைச்சீட்டு குறித்த ஆய்வில் ஈடுபட்டனா். அப்போது, பிச்சம்பட்டியை சோ்ந்த நிவாஸ்பாண்டி அனுமதியில்லாமல் வண்டல் மண்ணை டிராக்டரில் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதுதொடா்பாக புகாரின் பேரில், வைகை அணை போலீஸாா் வழக்குப்பதிந்து அவரைக் கைது செய்தனா். மேலும், டிராக்டரை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments