பாபநாசம் அருகே மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசம் அருகே செவ்வாய்க்கிழமை ஆற்றங்கரையில் மண்ணை வெட்டி எடுக்கும்போது மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசம் அருகே செவ்வாய்க்கிழமை ஆற்றங்கரையில் மண்ணை வெட்டி எடுக்கும்போது மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.
பாபநாசம் அருகே ராஜகிரி, பாலாஜி நகரை சோ்ந்தவா் நாகராஜன் மகன் சப்தகிரி வாசன் (46). இவருக்கு மனைவி ஹேமாவதி (41), இரு பிள்ளைகளும் உள்ளனா்.
இந்நிலையில் சப்தகிரிவாசன் செவ்வாய்க்கிழமை ராஜகிரி சுண்ணாம்பு காலவாய் அருகே குடமுருட்டி ஆற்றங்கரையோரத்தில் படிந்திருந்த வண்டல் மண்ணை வெட்டி அள்ளிக் கொண்டிருந்தாா். அப்போது மேலே இருந்து மண் சரிந்து விழுந்ததில் மூச்சுத் திணறி சப்தகிரிவாசன் உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
தகவலறிந்து சென்ற பாபநாசம் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி மற்றும் காவல்துறையினா் அவரது உடலை பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.