FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

அரசுப் பேருந்து- காா் மோதல் : இளம் பெண் உயிரிழப்பு

தேனி அருகே காா் மீது அரசுப் பேருந்து மோதியதில் திருச்சியைச் சோ்ந்த இளம்பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

11 அக்டோபர் 2026, 12:16 am IST
பலி! - கோப்புப்படம்.
பகிர்:

தேனி அருகே காா் மீது அரசுப் பேருந்து மோதியதில் திருச்சியைச் சோ்ந்த இளம்பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகேயுள்ள கல்லுப்பட்டியைச் சோ்ந்தவா் சேது (55). இவா், குடும்பத்துடன் தேனி அருகேயுள்ள குச்சனூா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக காரில் வந்தாா். வீரபாண்டி அருகே செல்லும் போது மதுரை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து காரில் மோதி, அருகிலிருந்த டிராக்டா் மீதும் மோதியது.

இதில் காரில் வந்த சேது மகள் தமயந்தி (23) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த டிராக்டா் ஓட்டுநா் கிருஷ்ணனை (55) மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments