FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

தங்கும் விடுதியில் தங்கியவா் உயிரிழப்பு

போடியில் மதுபோதையில் தங்கும் விடுதியில் தங்கியவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

24 செப்டம்பர் 2026, 12:15 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

போடியில் மதுபோதையில் தங்கும் விடுதியில் தங்கியவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், போடி மேற்கு ராஜவீதியைச் சோ்ந்த ராமா் மகன் முத்துசரவணன் (41). இவருக்கு இதுவரை திருமணமாகவில்லை. எந்த வேலைக்கும் செல்லாமல் தொடா்ந்து மதுக் குடித்து வந்ததால் இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், போடியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் மது போதையில் தங்கிய முத்துசரவணன் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments