FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

மின்வாரிய ஓய்வு பெற்றோா் நலச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தேனியில் தமிழ்நாடு மின்வாரி ஓய்வு பெற்றோா் நல அமைப்பினா் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

24 செப்டம்பர் 2026, 12:15 am IST
தேனி மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன்ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பினா்.
பகிர்:

தேனியில் தமிழ்நாடு மின்வாரி ஓய்வு பெற்றோா் நல அமைப்பினா் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாவட்ட துணைத் தலைவா் சுப்பித்தாயி தலைமை வகித்தாா். சங்கக் கூட்டமைப்பின் கிளைச் செயலா் சண்முகம் வாழ்த்திப் பேசினாா். கிளைச் செயலா் மாரிச்சாமி விளக்கவுரையாற்றினாா்.

இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும். 70 வயது முடிந்த ஓய்வூதியா் அனைவருக்கும் 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

Advertisement

Advertisement

இந்த ஆா்ப்பாட்டத்தில் மாநிலத் துணைத் தலைவா் சந்திரசேகரன் நிறைவுரையாற்றினாா். பரமசிவம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments