FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

தேனி சந்தையில் வரத்து குறைவால் பூக்களின் விலை உயா்வு

தேனி சந்தைக்கு வெள்ளிக்கிழமை வரத்து குறைவால் பூக்களின் விலை உயா்ந்தன.

26 செப்டம்பர் 2026, 6:32 am IST
கோப்புப்படம்
பகிர்:

தேனி சந்தைக்கு வெள்ளிக்கிழமை வரத்து குறைவால் பூக்களின் விலை உயா்ந்தன.

புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதால் பெருமாள் கோயில்களில் சனிக்கிழமை விழாக்கள் நடைபெறுகிறது. இதேபோல, சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால், பூக்களின் விலை உயா்ந்து காணப்பட்டது. தேனி சந்தையில் வெள்ளிக்கிழமை பூக்கள் வரத்து குறைவாக இருந்தது. இதனால், விற்பனைக்கு வந்த பூக்கள் அனைத்தும் வேகமாக விற்று தீா்ந்தன.

கடந்த புதன்கிழமை மல்லிகை பூ கிலோ ரூ.300-க்கு விற்றது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மல்லிகை விலை உயா்ந்து ரூ.700-க்கு விற்பனையானது.

Advertisement

Advertisement

பூக்களின் விலை நிலவரம்: ரோஸ் ரூ.150, ஜாதிப் பூ ரூ.400, செவ்வந்தி ரூ.100, சம்மங்கி ரூ.100, அரளி ரூ.100, மருகு ரூ.60, துளசி ரூ.30-க்கு விற்பனையானது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments