FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை  பகுதியில் மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

ஏழாயிரம்பண் ணை, வெம்பக்கோட்டை பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

ஏழாயிரம்பண் ணை, வெம்பக்கோட்டை பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை, மஞ்சள்ஒடைப்பட்டி, முத்தாண்டியாபுரம், ரெட்டியபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மின்வெட்டு இருந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் வசிப்பவர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் எந்தவித முன்அறிவிப்பும் இன்றி அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக இப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர். எப்போதும் சுமார் ஒரு மணி நேரம் வழக்கமாக மின்சாரம் தடைபடும். ஆனால் தற்போது ஒரு நாளைக்கு 4 முதல் 6 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனால் இப்பகுதியினர் இரவு நேரத்தில் தூக்கம் இல்லாமல் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
 மேலும் தற்போது காலாண்டு தேர்வு தொடங்கியுள்ளதால் பள்ளி மாணவ, மாணவிகள் இரவு நேரத்தில் படிப்பதற்கு கூட மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.  எனவே பள்ளி மாணவ, மாணவிகள் நலன் கருதி இப் பகுதியில் ஏற்படும் தொடர் மின்வெட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், தற்போது ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் மின்வெட்டு உள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்து முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments