FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சாத்தூர் அருகே அனுமதியின்றி  மணல் அள்ளியதாக  காவல் உதவி ஆய்வாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு

சாத்தூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளியதாக காவல் உதவி ஆய்வாளர் உள்பட  4 பேர் மீது வெம்பகோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

சாத்தூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளியதாக காவல் உதவி ஆய்வாளர் உள்பட  4 பேர் மீது வெம்பகோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வைப்பாற்று பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இத் தகவலின் பேரில் வெம்பகோட்டை காவல் உதவி ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையில் போலீஸார் வியாழக்கிழமை வைப்பாற்று பகுதியில் சோதனை நடத்தினர். இச் சோதனையில் வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பொன்.இருளப்பன் மற்றும் அன்னபூரணியாபுரம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் உள்ளிட்ட 3 பேர் பொக்லைன் இயந்திரம் மூலம் சட்டவிரோதமாக லாரிகளில் மணல் அள்ளியது தெரியவந்தது.
இதையடுத்து பொன்.இருளப்பன், பாலமுருகன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து,பொன். இருளப்பனை வெம்பக்கோட்டை போலீஸார் கைது செய்தனர். பின்னர் பொன். இருளப்பனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் இதற்கு உடந்தையாக இருந்ததாக தெரியவந்தது. 
  இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் மீதும் வழக்குப் பதிவு செய்து, மணல் அள்ள பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம் மற்றும் 2 லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments