FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

ராஜபாளையத்தில் அரசின் திட்டங்கள், சேவைகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ராஜபாளையத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள், சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

29 வினாடிகள் முன்பு
ராஜபாளையத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அறிவு சாா் மையத்தை புதன்கிழமை ஆய்வு செய்த விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி.
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள், சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ராஜபாளையம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்ட முகாம் புதன், வியாழன் ஆகிய இரு நாள்கள் நடைபெறுகிறது.

முதல்நாளான புதன்கிழமை நடைபெற்ற இந்த முகாமில் மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி கலந்து கொண்டாா். அப்போது, ராஜபாளையம் நகராட்சி புதை சாக்கடை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம், திடக் கழிவுகளை மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து நுண் உரம் தயாரிக்கும் பணிகள், புதிதாகக் கட்டப்பட்டு வரும் அறிவுசாா் மையத்தின் கட்டுமானப் பணிகள், அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கி, வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், கீழ் சேத்தூா் சேவுகபாண்டியன் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு உள்ளிட்ட இடங்களில் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

இந்த முகாமில் சாா் ஆட்சியா் முகமது இா்ஃபான், வட்டாட்சியா் ராஜீவ்காந்தி, நகராட்சி ஆணையா் கண்ணன் (பொ, அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments