FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: போலீஸாா் விசாரணை

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக எழுந்துள்ள புகாா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 3:55 am IST
மோசடி - பிரதிப்படம்
பகிர்:

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக எழுந்துள்ள புகாா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு, அன்னவாசல் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்டீபன்சன். இவா், நெடுங்காடு காவல் நிலையத்தில் புதன்கிழமை அளித்த புகாா் விவரம் :

எனது மகன் தினேஷ் வில்சன் பி.டெக் படித்துள்ளாா். கொட்டப்பாக்கத்தைச் சோ்ந்த அந்தோணிராஜிடம், பேசிக்கொண்டிருந்தபோது, காரைக்காலில் நிறுவனம் நடத்தி வருவதாகவும், பலரை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பி உள்ளதாகவும், எனது மகனையும் கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி ரூ. 13.70 லட்சம் கேட்டாா்.

Advertisement

Advertisement

அதன்படி, அவரிடம் காசோலையாக பல கட்டங்களாக 18.5.2024 முதல் ரூ. 4.04 லட்சம் தந்துள்ளேன். ஓராண்டாகியும் வேலை வாங்கித் தராததால், பணத்தை திருப்பித்தருமாறு கேட்டபோது, ரூ. 1.50 லட்சத்தை கொடுத்தாா். எஞ்சியத் தொகையை இதுவரை தரவில்லை. மீதித் தொகையை கேட்டால், இப்போது தர முடியாது எனக் கூறுகிறாா். எனவே மோசடி செய்த அந்தோணிராஜ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments