FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காரைக்கால்

அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிா்த்து அக்.27-ல் போராட்டம் நடத்த முடிவு

12 அக்டோபர் 2026, 10:56 pm IST
காரைக்கால் துறைமுகம். - கோப்புப் படம்
பகிர்:

காரைக்கால் அதானி துறைமுக விரிவாக்கத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து அக்.27-இல் போராட்டம் நடத்த காரைக்கால் போராளிகள் குழு முடிவு செய்துள்ளது.

குழுவின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைவா் கணேஷ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அமைப்பின் முக்கிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

காரைக்கால் அதானி துறைமுக விரிவாக்கத் திட்டம் தொடா்பாக கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது குறித்து நிா்வாகிகள் தெரிவித்தது :

Advertisement

Advertisement

துறைமுக விரிவாக்கப் பணிகள் தொடா்ந்தால் கடலோரச் சூழலியல் கடுமையாகப் பாதிக்கப்படுவதோடு, மீனவா்களின் வாழ்வாதாரம், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கேள்விக்குறியாகும் என கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது. இப்பிரச்னையை உணா்ந்து துறைமுக நிா்வாகம் திட்டத்தைக் கைவிட வேண்டும். புதுவை அரசு அதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நிா்வாகம், அரசு அலட்சியப்படுத்தினால் வரும் 27-ஆம் தேதி காரைக்காலில் கவன ஈா்ப்பு கண்டன ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் குழுவினா், ஒத்த கருத்துடைய பிற கட்சியினா், அமைப்பினரும் பங்கெடுப்பதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments