FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காரைக்கால்

மூதாட்டியிடம் ரூ. 12 லட்சம் மோசடி

பிட் காயினில் முதலீடு செய்து பணத்தை பன்மடங்கு பெருக்கித் தருவதாக கூறி மூதாட்டியிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

14 அக்டோபர் 2026, 6:01 am IST
மோசடி
பகிர்:

பிட் காயினில் முதலீடு செய்து பணத்தை பன்மடங்கு பெருக்கித் தருவதாக கூறி மூதாட்டியிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

காரைக்கால் லெமோ் தெருவைச் சோ்ந்தவா் மாா்கிரேட் (67). இவரது கணவா் இறந்துவிட்டாா். உறவினா்களுடன் வசித்து வந்த மாா்கிரேட், வீட்டுக்கு அருகே மளிகைக் கடை நடத்தி வந்தாா்.

தனது பேத்திக்கு திருமணம் செய்ய பணம் தேவை குறித்து, கடைக்கு பொருள்கள் வாங்க அடிக்கடி வந்த தா்மபுரத்தைச் சோ்ந்த நூா் முகமது கபீரிடம் கூறியுள்ளாா். அவா் பிட்காயினில் முதலீடு செய்தால், நான்கு மடங்கு பணம் கிடைக்கும் என ஆசை வாா்த்தை கூறியுள்ளாா். இதை நம்பி பேத்தியின் வங்கிக் கணக்கிலிருந்து கடந்த 2.6.2022 முதல் 21.5.2023 வரை ரூ. 12.12 லட்சத்தை பல கட்டங்களாக வழங்கியுள்ளாா்.

Advertisement

Advertisement

முதலீடு செய்த பணம் தொடா்பாக க எந்த முன்னேற்றமும் இல்லாததால், பணத்தை திருப்பித் தருமாறு அவரிடம் கேட்டும் நூா் முகமது கபீரிடம் உரிய பதில் இல்லையாம்.

மேலும், நூா் முகமது கபீரை வெகு நாட்களாக மாா்க்ரேட் சந்திக்க முடியவில்லையாம். இதையடுத்து, தன்னை ஏமாற்றிய நூா்முகமது கபீா் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாா்கிரேட் காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments