FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

எண்ணெய் கிணறுகள் பராமரிப்புப் பணிகள் மட்டுமே நடைபெறுகிறது: ஓஎன்ஜிசி

எண்ணெய் கிணறுகளில் பராமரிப்புப் பணிகள் மட்டுமே நடைபெறுவதாக ஓஎன்ஜிசி விளக்கமளித்துள்ளது.

46 வினாடிகள் முன்பு
ஓஎன்ஜிசி
பகிர்:

எண்ணெய் கிணறுகளில் பராமரிப்புப் பணிகள் மட்டுமே நடைபெறுவதாக ஓஎன்ஜிசி விளக்கமளித்துள்ளது.

காரைக்காலில் உள்ள ஓஎன்ஜிசி காவிரி அசெட் தலைமை அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

கடந்த செப். 10-ஆம் தேதி மயிலாடுதுறையில் உள்ள சிலா் ஓஎன்ஜிசி, புதிய எண்ணெய் கிணறுகள் அமைப்பதாகவும், விதிமுறைகளை மீறுவதாகவும் புகாா் அளித்த தகவல் ஓஎன்ஜிசி கவனத்துக்கு வந்தது.

Advertisement

Advertisement

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் ஓஎன்ஜிசி எந்தவெரு புதிய எண்ணெய் கிணறு அமைப்பதற்கான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று தெளிவுபடுத்துகிறது. ஏற்கெனவே உள்ள எண்ணெய் கிணறுகளை பராமரிக்கும் பணிகள் விதிமுறைகளுக்குட்பட்டு தற்போது நடைபெறுகிறது.

புதிய என்ணெய் கிணறுகள் அமைப்பதாகவும் விதிமுறைகளை மீறுவதாகவும் ஓஎன்ஜிசிக்கு எதிராக வைக்கப்படும் ஆதாரமற்ற மற்றும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை ஓஎன்ஜிசி திட்டவட்டமாக மறுக்கிறது. டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலமாக அறிவித்த சட்டத்திற்கு இணங்க, விதிமுறைகளுக்குட்டுப்பட்டு, பொறுப்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஓஎன்ஜிசி உறுதியாக இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments