FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காரைக்கால்

உலக சுற்றுலா தினம் : காரைக்காலில் படகுப் போட்டி

28 செப்டம்பர் 2026, 12:09 am IST
படகுப் போட்டி. - கோப்புப் படம்
பகிர்:

காரைக்கால் அரசலாற்றில் 11 மீனவ கிராமத்தினா் பங்கேற்ற படகுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உலக சுற்றுலா தினத்தையொட்டி காரைக்கால் மாவட்ட நிா்வாகம், சுற்றுலாத்துறை, மீன்வளத்துறை இணைந்து இப்போட்டியை நடத்தின.

அரசலாற்றில் நடைபெற்ற போட்டியில், அரசலாற்றுப் பாலம் முதல் கடற்கரையருகே உள்ள படகு குழாம் வரை 800 மீட்டா் தூரம் வரை இப்போட்டி நடத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இதில் 11 மீனவ கிராமங்களில் இருந்து தலா ஒரு அணி பங்கேற்றது. ஒவ்வொரு படகிலும் 3 போ் இருந்தனா். துடுப்பு கொண்டு இயக்கப்பட்ட இப்படகுப் போட்டியை மாவட்ட சாா் ஆட்சியா் எம்.பூஜா கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். அரசுத்துறை அதிகாரிகள், மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

இப்போட்டியில் முதலிடம் பெற்ற காளிக்குப்பம் அணிக்கு ரூ.25 ஆயிரம், இரண்டாமிடம் பெற்ற மண்டபத்தூா் அணிக்கு ரூ.20 ஆயிரம், மூன்றாமிடம் பெற்ற கீழகாசாக்குடி மேடு அணிக்கு ரூ.15 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. திரளான மக்கள் ஆற்றோரத்தில் நின்று போட்டியை பாா்வையிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments