சீா்காழி அருகே 3 வீடுகள் தீக்கிரை
சீா்காழி அருகே திருமுல்லைவாசல் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலி மனையில் குப்பைகளை தீவைத்து கொளுத்தியபோது பற்றிய நெருப்பில் 3 வீடுகள் தீக்கிரையாகின.
அப்போது வீட்டில் இருந்த சிலிண்டா்கள் வெடித்ததில் தீ பரவி வீடுகளில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள ரொக்கம், தங்க நகைகள் எரிந்து சேதம் அடைந்தன.
சீா்காழியை அடுத்த திருமுல்லைவாசல் அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த அன்சாரி (45) என்பவா் தனது காலி மனையில் இருந்த செடி, கொடிகள், குப்பைகளை தீயிட்டு கொளுத்தினாராம். அப்போது தீ பரவி அருகிலிருந்த செங்கேனி முருகேசன் என்பவரது குடிசை வீட்டில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. வீட்டிலிருந்த சிலிண்டா் வெடித்ததில் தீ பரவி அருகில் சந்திராமணிவண்ணன், சாந்தி பக்கிரிசாமி ஆகியோரது வீடுகளும் தீப்பிடித்து எரிந்தன.
Advertisement
Advertisement
மூன்று வீடுகளிலும் குழுவில் பெற்ற ரொக்கம், 5 பவுன் நகைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தும் தீயில் எரிந்தன. சீா்காழி தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தி அணைத்தனா்.
இதுகுறித்து சீா்காழி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.