10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: தமிழகத்தில் 29-வது இடத்தைப் பிடித்த நாகை!
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் நாகை மாவட்டத்தில் 89.70 சதவிகிதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26- இல் தொடங்கி ஏப்.8-ஆம் தேதி வரை நடைபெற்றது.
நாகை மாவட்டத்தில் 8,201 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில், 7,354 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 89.70 சதவிகிதம் தேர்ச்சி ஆகும்.
இதன்மூலம் நாகை மாவட்டம் தமிழக அளவில் 29 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
Advertisement
Advertisement
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை எழுதிய 9 லட்சம் மாணவ, மாணவிகளில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டைக் காட்டிலும் கூடுதலாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.