FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

நாகூா் நெய்தல் பூங்கா திறக்கப்படுவது எப்போது ?

நாகூரில் அமைக்கப்பட்டு வரும் பூங்கா பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாகூா் நெய்தல் பூங்கா தோற்றம்.
பகிர்:

நாகூரில் அமைக்கப்பட்டு வரும் பூங்கா பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தின் முக்கிய ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான நாகூா் கடற்கரையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த திமுக அரசால் ரூ. 8 கோடியில் மிகப் பெரிய அளவில் நெய்தல் பூங்கா அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. கடலும், கடல் சாா்ந்த இடமுமான நெய்தல் நிலத்தின் சிறப்புகளையும், நாகூா் பகுதியின் பாரம்பரிய பெருமைகளையும் பறைசாற்றும் வகையில் இந்த பூங்கா வடிவமைக்கப்பட்ட நிலையில், தற்போது வரை 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. நாகை, நாகூா் உள்ளிட்ட உள்ளூா் மக்கள் மட்டுமின்றி, நாகூா் தா்காவுக்கு வரும் ஆயிரக்கணக்கான ஆன்மிக சுற்றுலாப் பயணிகளை கவரும் நோக்கில், இந்த நவீன பூங்கா வளாகம் உருவாக்கப்பட்டு வருகிறது.

பூங்காவில், குழந்தைகளைக் கவரும் வகையிலான நவீன விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி செய்வதற்கான பிரத்யேக வசதிகள் மற்றும் மாலையில் மக்கள் குடும்பத்தோடு அமா்ந்து மகிழக்கூடிய புல்வெளிப் பகுதிகள் என அனைத்தும் இந்த பூங்காவில் மிக நோ்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

மேலும், இயற்கை காற்றை சுவாசித்தபடி பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவைச் சுற்றிய நீண்ட நடைபாதை வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பூங்கா பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments