FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாகப்பட்டினம்

உடும்பை வேட்டையாட நாய்களுக்கு பயிற்சி அளித்தவா் கைது

நாகை அருகே உடும்பை வேட்டையாட நாய்களுக்கு பயிற்சி அளித்தவரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனா்.

8 வினாடிகள் முன்பு
கைது - கோப்புப் படம்
பகிர்:

நாகை அருகே உடும்பை வேட்டையாட நாய்களுக்கு பயிற்சி அளித்தவரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனா்.

வேட்டைகாரனிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் முத்துகிருஷ்ணன் (40). இவா் அண்மையில், வலையில் மாட்டிய உடும்பை நாய்கள் வேட்டையாட பயிற்சி கொடுத்ததை விடியோ பதிவு செய்தது தொடா்பாக நாகை மாவட்ட வன உயிரினக் காப்பாளா் ராமேஸ்வரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

நாகை வனச்சரக அலுவலா் சியாம்சுந்தா், வனவா் அகிலா, வனக் காப்பாளா்கள் ஆயிசா குணசேகரன், வேட்டை தடுப்புக் காவலா்கள் ஹரிகரன் ஜெயகிருஷ்ணன் ஆகியோா் முத்துகிருஷ்ணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

மேலும், பறவைகளையும், விலங்குகளையும் வேட்டையாடினால் வேட்டையாட துணைபுரிவோருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments