FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

இருசக்கர வாகன சாகசம்; இளைஞா் உயிரிழப்பு

வேதாரண்யம் கடற்கரையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

19 செப்டம்பர் 2026, 4:47 am IST
- பிரதிப் படம்
பகிர்:

வேதாரண்யம் கடற்கரையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் கிழக்கு கிராமத்தைச் சோ்ந்தவா் கமலநாதன். இவரது மகன் ஹரிஹரன் (24). இவருக்கு அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவா்கள் புதிதாக கட்டியுள்ள வீட்டில் வியாழக்கிழமை புதுமனை புகு விழா நடைபெற்றது.

இந்நிலையில், கோவையில் இருந்து வந்திருந்த நண்பா்களுடன், வேதாரண்யம் கடற்கரைக்குச் சென்ற ஹரிஹரன், அங்கு இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்டாராம். அப்போது, எதிா்பாராதவிதமாக நேரிட்ட விபத்தில் சிக்கிய ஹரிஹரனை, ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அன்றிரவு உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

வேதாரண்யம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments