FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வேதாரண்யம் கடற்கரையில் பைக்கில் சாசகம்! திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞர் பலி!

வேதாரண்யம் கடற்கரையில் பைக்கில் சாசகத்தில் ஈடுபட்ட இளைஞர் பலியானதைப் பற்றி...

18 செப்டம்பர் 2026, 12:04 pm IST
ஹரிஹரன்.
பகிர்:

வேதாரண்யம் கடற்கரையில் மோட்டார் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் கமலநாதன். இவரது மகன் ஹரிஹரன் (24). இவரின் திருமணத்துக்குப் பெண் பார்த்து கடந்த செப். 14 ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து புதிதாக கட்டப்பட்ட இவரது வீட்டில் வியாழக்கிழமை காலையில் குடிபுகும் நிகழ்ச்சியும் நடந்தது.

இந்த நிலையில், நேற்று (செப். 17) மாலையில் கோவையில் இருந்து வந்திருந்த ஹரிஹரனின் நண்பர்களுடன் வேதாரண்யம் கடற்கரையில் அட்வென்ச்சர் பைக்கை வைத்து சாகத்தில் ஈடுபட்டு விளையாடிக் கொண்டிருந்தார்.

Advertisement

Advertisement

அப்போது அந்த பைக் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டு, ஹரிஹரன் ஒரத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனில்லாமல் ஹரிஹரன் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து வேதாரண்யம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

summary

A young man died on Thursday night while performing stunts on a motorcycle at the Vedaranyam beach.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments