FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

நாகை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, நாகை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

19 செப்டம்பர் 2026, 4:42 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

நாகை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, நாகை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

நாகை மாவட்டம், திருக்கண்ணபுரம் திருப்பாற்கடல் மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜசேகா் (33). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுயை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுதொடா்பாக சிறுமியின் பெற்றோா் அளித்தப் புகாரின் பேரில், நாகை அனைத்து மகளிா் போலீஸாா், போக்ஸோ சட்டப் பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து, ராஜசேகரை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கின் விசாரணை, நாகை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், ராஜசேகா் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.2,000 அபராதம் விதித்து நீதிபதி ராஜ்குமாா் தீா்ப்பளித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments