குரு பகவான் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா
நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் குரு பரிகார
நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் குரு பரிகார கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, குரு பரிகார கோயிலின் அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. காலை 9 மணிக்கு கலங்காமற்காத்த விநாயகர், ஆக்ஞா கணபதி சன்னிதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டது. தொடர்ந்து, 11 மணிக்கு உத்ஸவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. விநாயகருக்கு அர்ச்சனை செய்து பக்தர்களுக்கு பிரசாதங்களை ரமேஷ் சிவாச்சாரியார் தலைமையில், அர்ச்சகர்கள் வழங்கினர்.
மேலும், வியாழக்கிழமை குரு வாரம் என்பதால் மூலவர் குரு பகவானுக்கு தங்கக் கவசம் சாற்றப்பட்டிருந்தது. மாலையில் மூசிக வாகனத்தில் விநாயகர் வீதியுலா நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை அறநிலைய உதவி ஆணையர் மற்றும் கோயில் தக்கார் ச. கிருஷ்ணன், அறநிலைய உதவி ஆணையர் மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி பி. தமிழ்ச்செல்வி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
இதேபோல், நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் எழுந்தருளியுள்ள தும்பிக்கையாழ்வார், காசி விசுவநாதர் கோயில், கோகமுகேசுவரர் கோயில், யமுனாம்பாள் கோயில், பூவனூர் சதுரங்க வல்லபநாதர் ஆகிய கோயில்களில் எழுந்தருளியுள்ள விநாயகருக்கும், நீடாமங்கலம் வெண்ணாற்றங்கரை, கோரையாற்றங்கரை விநாயகர் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்படடு விநாயகருக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.