18-இல் சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் முகாம்
திருவாரூர் மாவட்ட சிறுபான்மையின மக்களுக்கு கடன் வழங்கும் முகாம் செப்.18-ஆம் தேதி நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்.
திருவாரூர் மாவட்ட சிறுபான்மையின மக்களுக்கு கடன் வழங்கும் முகாம் செப்.18-ஆம் தேதி நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் சிறுபான்மையினர்களாக கருதப்படும் இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சியர்கள் மற்றும் ஜெயின் பிரிவைச் சார்ந்தவர்களில் கல்வியில் சிறந்து விளங்கி பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு கல்விக் கடன் திட்டம்-1, கல்விக் கடன் திட்டம்-2 மூலம் கடன் வழங்கப்படுகிறது.
2018-2019 ஆம் ஆண்டுக்கு தொழில் சார்ந்த படிப்புகளான பி.இ, பி.டெக், எம்.பி.பி.எஸ், பி.எஸ்சி (அக்ரி) மற்றும் இதர படிப்புகளுக்கும் மற்றும் நீட் தேர்வில் உயர்ந்த நிலையை பெற்று அரசு மற்றும் சுய நிதிக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தைச் செலுத்த ஏதுவாக கல்விக் கடன் பெறவும், பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் வியாபாரம் மற்றும் இதர தொழில்கள் செய்வதற்கு தனிநபர் கடன் திட்டம் -1, தனிநபர் கடன் திட்டம் -2, கறவை மாடு கடனுதவி, ஆட்டோ கடன், சிறுகடன் திட்டம்-1 (சுய உதவிக் குழு கடன்), சிறுகடன் திட்டம்-2 (சுய உதவிக் குழு கடன்) என பல்வேறு கடன் உதவித் திட்டங்களை சென்னை, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் செயல்படுத்தி வருகிறது.
கடனுதவி பெற தமிழகத்தில் வசிக்கும் சிறுபான்மையினர் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். தனிநபர் ஆண்டு வருமானம் கிராமப்புறத்துக்கு ரூ. 98 ஆயிரம், நகர்புறத்துக்கு ரூ.1.20 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.ஆண்டு வருமானம் ரூ. 6 இலட்சம் வரை இருந்தால் திட்டம்-2 ன் கீழ் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினர் மக்கள் டாம்கோ கடன் திட்டங்கள் மூலம் பயன்பெறும் வகையில் செப்.18-ஆம் தேதி கடனுதவி வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளதால் சிறுபான்மையின மக்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.