FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

கூத்தாநல்லூர்: வெண்ணாற்றங்கரையில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வெண்ணாற்றங்கரையில் ஆடிப்பெருக்குப் பண்டிகை கொண்டாடப்பட்டது.

Updated On : 3 ஆகஸ்ட் 2022, 2:02 pm IST
பகிர்:

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வெண்ணாற்றங்கரையில் ஆடிப்பெருக்குப் பண்டிகை கொண்டாடப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்றுப் பரவும் என்ற அச்சத்தில், வழிப்பாட்டுத் தலங்கள் மூடப்பட்டு இருந்தது. தற்போது, அனைத்து வழிப்பாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டுவிட்டன.

இந்நிலையில், ஆடிப்பெருக்குப் பண்டிகையையொட்டி வெண்ணாறு, கோரையாறு உள்ளிட்ட ஆறுகளிலும் தண்ணீர் கரை ஓடுகிறது. கடந்த மூன்றாண்டுகளுக்கு முந்தை ஆண்டு, ஆற்றில் தண்ணீர் இல்லாதால், வீடுகளில் அடிப்பம்புகளிலும், போர் செட்டுகளிலும் ஆடிப்பெருக்கை கொண்டாடக் கூடிய நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டு கரோனா தொல்லையால் ஊரடங்கு போடப்படவில்லை.

Advertisement

Advertisement

மேலும், அனைத்து வழிப்பாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டுவிட்டன. மேலும், ஆற்றில் தண்ணீரும் வழிந்தோடுகிறது. அதனால், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும்  மகிழ்ச்சியுடன் ஆடிப்பெருக்குப் பண்டிகையை கொண்டாடினர். ஆடி மாதத்தின் முக்கியப் பண்டிகைகளில் பிரதானமான பண்டிகை ஆடி மாதம் 18 ஆம் தேதி கொன்டாடப்படும் ஆடிப்பெருக்கு பண்டிகை ஆகும்.

இது முழுக்கப் பெண்களுக்கானப் பண்டிகையாகும். மேலும், நீர் நிலைகள் நிறைந்த பகுதிகளான தண்ணீருக்காகவும், தண்ணீரை வணங்கியும் கொண்டாடப்படும் பண்டிகை ஆடிப்பெருக்கு பண்டிகையாகும். கூத்தாநல்லூர் வட்டத்தில் ஓடக்கூடிய வெண்ணாறு, கோரையாறு, வெள்ளியாறு மற்றும் பாண்டவையாறு உள்ளிட்ட ஆறுகளில் ஆடிப்பெருக்கை பெண்கள் கொண்டாடினர். 

கூத்தாநல்லூர் வெண்ணாற்றில் கொரடாச்சேரி பிரதான சாலை அய்யனார் கோவில், காதர் மஸ்தான் தர்ஹா, நாகூரார் மண்டபம், தோட்டச்சேரி, அப்துல் காலாம் தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் வீட்டின் எதிரே ஓடக்கூடிய வெண்ணாற்றங்கரையில், காவிரித் தாய்க்கு உரித்த பண்டிகையான ஆடிப்பெருக்குப் பண்டிகையை கொண்டாடினர். இதேபோல், மரக்கடை தாமரைக்குளம், சேகரை பிள்ளையார் கோயில் பின்புறம், கோரையாற்றில் காளியம்மன் கோயில் எதிரேயுள்ள படித்துறை, பாண்டவையாறு, சித்தாம்பூர், புளியங்குடி குளம் மற்றும் பனங்காட்டாங்குடி, குடிதாங்கிச்சேரி ஆகிய இடங்களில் இயங்கும் மனோலயம் மனவளர்ச்சிக் குன்றியோர் சிறப்புப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் கொண்டாடப்பட்டன. 
மகிழ்ச்சியுடன் வந்த பெண்கள் ஆற்று மணலில் பிள்ளையார் பிடித்து, விளக்கேற்றி வைத்தனர். இதைத்தொடர்ந்து, பழங்கள், வெல்லம் தேங்காய் கலந்த அரிசி, கண்ணாடி மற்றும் காதோலை , கருகமணி உள்ளிட்டவைகளை வைத்து படையலிட்டனர். அதன் பிறகு, மூத்த சுமங்கலி, திருமணம் ஆகும் நிலையில் இளம் வயதில் உள்ள பெண்கள் உள்பட அனைத்துப் பெண்களளுக்கும் கழுத்தில் மஞ்சள் கயிற்றைக் கட்டி விட்டனர். 

அதன் பிறகு,  ஒருவரையொருவர் மஞ்சள் கயிறுகளைக் கட்டிக் கொண்டனர். தொடர்ந்து, காதோலை, கருகமணியை ஓடும் ஆற்றுத் தண்ணீரில் விட்டனர். ஆடிப் பண்டிகையில், இளம் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என பலரும் பங்கேற்று காவிரித் தாயை வணங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments