FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பாலியல் புகாரில் பேராயர் ஆஜராக கேரள காவல்துறை சம்மன்

கேரள மாநிலத்தில் கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பேராயர், விசாரணைக்காக

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

கேரள மாநிலத்தில் கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பேராயர், விசாரணைக்காக வரும் 19-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பேராயருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை தலைவர் விஜய் சாகரே புதன்கிழமை தெரிவித்தார்.
ஜலந்தர் கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் பிரான்கோ முல்லகல், தம்மை பாலியல் வன்கொடுமை செய்ததாக கன்னியாஸ்திரி ஒருவர் புகார் கூறியிருந்தார். இதுதொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க மறுப்பதாக அவர் குற்றம்சாட்டினார். இந்நிலையில், புகார் தொடர்பாக விசாரிக்கும் சிறப்பு விசாரணைக் குழு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பதில் அளிக்குமாறு மாநில அரசுக்கு, கேரள உயர் நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை உத்தவிட்டது.
இதற்கிடையே, பேராயர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கிறிஸ்தவ மதத்தின் தலைமையகமான வாடிகனுக்கு அந்த கன்னியாஸ்திரி கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், ""பேராயர் தனது பணம் மற்றும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வழக்கை நீர்த்துப் போகச் செய்ய முயற்சிக்கிறார். அவரை பேராயர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். உண்மைக்கு எதிராக தேவாலயம் கண்ணை மூடிக் கொண்டுள்ளது. நான் இழந்ததை தேவாலயத்தால் திருப்பித் தர முடியுமா?'' என்று கன்னியாஸ்திரி குறிப்பிட்டிருந்தார்.
இந்தச் சூழலில், பேராயருக்கு எதிரான வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து, கேரள காவல்துறை உயர் அதிகாரிகள், துறை தலைவர் விஜய் சாகரே தலைமையில் கொச்சியில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேராயருக்கு சம்மன் அனுப்புவதற்கு முடிவு எடுக்கப்பட்டது.
நெருக்கடி: பேராயர் பிரான்கோ முல்லகல் பதவி விலகிவிட்டு சட்ட விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் வி.எம்.சுதீரன் வலியுறுத்தியுள்ளார். அதே சமயம், பேராயர் மீது புகார் குறித்த கன்னியாஸ்திரியை இழிவாக விமர்சனம் செய்திருந்த கேரள எம்எல்ஏ பி.சி.ஜார்ஜ், தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments