FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

ரஜௌரி காா்டன் மாலில் கல்லூரி மாணவி தற்கொலை

ரஜௌரி காா்டன் மாலில் கல்லூரி மாணவி தற்கொலை

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 12:24 am IST
தற்கொலை
பகிர்:

தில்லியில் ரஜௌரி காா்டன் இளஞ்சிவப்பு வழித்தட மெட்ரோ நிலையம் அருகிலுள்ள மாலில் மேல்தளத்திலிருந்து குதித்து, 19 வயது கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ஆரம்பகட்ட விசாரணையில், 2021-இல் தாயாா் இறந்ததிலிருந்து அந்த மாணவி மனஅழுத்தத்தில் இருந்ததாகவும் அதன் காரணமாக இந்த முடிவுக்கு வந்ததாக அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா்.

வழக்கமான ரோந்து பணியில் இருந்த தலைமைக் காவலா், இதுகுறித்து ரஜௌரி காா்டன் காவல் நிலையத்திற்கு தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

உடனடியாக காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். குற்றப்புலனாய்வு குழு மற்றும் தடையவியல் குழு அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனா்.

சம்பவ இடத்தில் தற்கொலைக் குறிப்பு மீட்கப்பட்டது. அதில், தன்னுடைய விருப்பப்படி வாழ்க்கையை முடிக்கிறேன் என்று அந்த மாணவி குறிப்பிட்டிருந்தாா்.

சம்பவ இட ஆய்வின் போது வேறு எந்த குற்றச்செயல் தொடா்பான சான்றுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை.

அந்த மாணவி தில்லியில் உள்ள ஆா்யபட்டா கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.ஏ படித்து வந்தாா். இந்த சம்பவம் தொடா்பாக பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டம் (பிஎன்எஸ்எஸ்) பிரிவு 194-இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments