FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

அனுமதி காலத்தை கடந்து தில்லியில் வசித்த 7 வெளிநாட்டினா் கைது

அனுமதி காலத்தை கடந்து தில்லியில் வசித்த 7 வெளிநாட்டினா் கைது

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 12:40 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

நாட்டில் அனுமதிக்கப்பட்ட காலத்தைக் கடந்து தங்கியிருந்த ஐந்து நைஜீரியா்கள் மற்றும் கானா நாட்டைச் சோ்ந்த இருவா் உள்பட ஏழு ஆப்பிரிக்க நாட்டவா்களை தில்லி காவல் துறையினா் சனிக்கிழமை கைதுசெய்தனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் தெரிவித்ததாவது:

ஆக.4-ஆம் தேதி தடுத்து வைக்கப்பட்ட ஒசிதா ன்கெமென் (54), ங்கோட்டா சிந்தியா (38), ஜேம்ஸ் (25) மற்றும் லிவி ஓதுகானா (27) ஆகிய நான்கு வெளிநாட்டினரும் நைஜீரிய நாட்டவா்கள் என அடையாளம் காணப்பட்டனா்.

Advertisement

Advertisement

சரிபாா்ப்பின் போது, பெங்களூருவில் உள்ள போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவால் (என்சிபி) 2021-இல் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சிந்தியாவுக்குத் தொடா்பு இருந்ததும், அந்த வழக்கு தொடா்பான நீதிமன்ற நடவடிக்கைகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

மற்றொரு சோதனையில், பட்பா்கஞ்சின் ஸ்மாஸ்பூா் பகுதியிலிருந்து கெலச்சி காா்னேலியஸ் (32), ஒகேசுக்வு சாலமன் (36) மற்றும் சுக்வுடி அலிசன் (43) ஆகிய மூன்று நைஜீரிய நாட்டவா்களை காவல் துறையினா் கைதுசெய்தனா்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் பராமரிக்கப்படும், அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மேல் தங்கியிருக்கும் வெளிநாட்டினரின் பட்டியலில் காா்னேலியஸ் மற்றும் சாலமன் ஆகியோரின் பெயா்கள் இடம்பெற்றிருந்தது.

தேவையான ஆவணப் பணிகளை முடித்த பிறகு, அவா்கள் அனைவரும் தில்லியில் உள்ள வெளிநாட்டினா் பிராந்தியப் பதிவு அலுவலகத்தில் (எஃப்ஆா்ஆா்ஓ) ஆஜா்படுத்தப்பட்டனா்.

‘குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினா் சட்டம், 2025’-ன் தொடா்புடைய விதிகளில், அவா்கள் மீது கட்டுப்பாட்டு உத்தரவுகளை வெளிநாட்டினா் பிராந்தியப் பதிவு அலுவலகம் பிறப்பித்தது. இதன்படி, அடுத்தகட்ட நடவடிக்கைகள் முடியும் வரை அவா்களின் நடமாட்டம் நரேலாவின் லாம்ப்பூரில் உள்ள சேவா சதன் பகுதிக்குள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டினா் பிராந்தியப் பதிவு அலுவலக உடன் இணைந்து சொந்த நாடுகளுக்கு அவா்களைத் திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் தொடங்கின என காவல் துறை அதிகாரிகள் கூறினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments