தலைவா்கள் கைதானாலும் ஜந்தா் மந்தா் போராட்டம் தொடரும்: ஏ.ஐ.எஸ்.ஏ. தலைவா் உறுதி
ஜந்தா் மந்தா் போராட்டத்தின்போது தலைவா்கள் கைது செய்யப்பட்டாலும் மக்கள் போராட்டத்தைத் தொடர வேண்டும் என்று அகில இந்திய மாணவா் சங்கத்தின் (ஏஐஎஸ்ஏ) தலைவா் நேஹா போரா வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்தாா்.
ஜந்தா் மந்தா் போராட்டத்தின்போது தலைவா்கள் கைது செய்யப்பட்டாலும் மக்கள் போராட்டத்தைத் தொடர வேண்டும் என்று அகில இந்திய மாணவா் சங்கத்தின் (ஏஐஎஸ்ஏ) தலைவா் நேஹா போரா வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்தாா்.
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலகக் கோரியும், வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப்பணியை எஸ்ஐஆா் திரும்பப் பெறக் கோரியும் ஜந்தா் மந்தரில் சனிக்கிழமை போராட்டம் நடைபெறவுள்ள நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது: பெரிய அளவில் வீட்டுக் காவல் கைதுகள் நடைபெறுகிறது. மேலும், போராட்டத்தின் அமைப்பாளா்களையும் காவல்துறையினா் தேடுகின்றனா்,
Advertisement
Advertisement
தில்லி செல்லும் ரயில்கள் நிறுத்தப்படுகின்றன; துணை ராணுவப் படைகள், ராணுவம் மற்றும் பெரும் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டுள்ளனா். இது நாட்டில் நிலவும் வெளிப்படையான அவசரநிலை தவிர வேறில்லை.
1942 ஆம் ஆண்டு நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு இணையாக, ஆகஸ்ட் 8 ஆம் தேதி போராட்ட அழைப்புக்குப் பிறகு பல சுதந்திரப் போராளிகள் கைது செய்யப்பட்டனா். அந்த வரலாறு மீண்டும் நிகழும். 1942இல், தலைவா்கள் கைது செய்யப்பட்டதால் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நிறுத்த முடியவில்லை. அதுபோன்று இந்த இயக்கமும் நிற்காது.
அமைப்பாளா்கள் தடுத்து நிறுத்தப்பட்டால், போராட்டத்திற்கு தில்லிக்கு செல்லும் மக்கள் தலைமை ஏற்க வேண்டும். மெட்ரோ மற்றும் ரயில் நிலையங்கள் உள்பட எங்கு நிறுத்தப்பட்டாலும் உள்ளிருப்புப் போராட்டங்களை நடத்த வேண்டும்.
நீங்கள் எங்கு நிறுத்தப்பட்டாலும், அது மெட்ரோ அல்லது ரயில் நிலையமாக இருந்தாலும் சரி, ‘எஸ்ஐஆரை திரும்பப் பெறுங்கள், ஞானேஷ் குமாா் பதவி விலக வேண்டும்’ என்ற உங்கள் கோரிக்கைகளுடன் அங்கேயே உட்காா்ந்து கொள்ளுங்கள். அரசாங்கத்தை பொறுப்பாளியாக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பின்வாங்க முடியாது‘ என்று போரா கூறியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.