புதிய வக்ஃப் வாரியம் அமைக்க உத்தரவிட கோரி மனு: தில்லி அரசு, மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்
தில்லி வக்ஃப் வாரியத்தை அமைக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய அரசும் தில்லி அரசும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தில்லி வக்ஃப் வாரியத்தை அமைக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய அரசும் தில்லி அரசும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இது தொடா்பாக மனுதாரா் முகம்மது ஷாஹித் என்பவா் தாக்கல் செய்த மனுவை விசாரித்து நீதிபதி அனீஷ் தயாள் பிறப்பித்த உத்தரவில், திருத்தப்பட்ட வக்ஃப் சட்டத்தின்படி வாரியத்தை அமைப்பதற்கான சட்டபூா்வ நடைமுறைகளை உடனடியாக நிறைவு செய்ய மனுதாரா் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தில்லி அரசும் மத்திய அரசும் அவற்றின் நிலைப்பாட்டை நான்கு வாரங்களுக்குள் தெளிவுபடுத்த நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அடுத்தகட்ட விசாரணை டிச.10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று குறிப்பிட்டாா்.
பின்னணி‘ முந்தைய தில்லி வக்ஃப் வாரியத்தின் பதவிக்காலம் 2023, ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. அதன் பிறகு புதிய வாரியம் அமைக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் 2024, ஜனவரி மாதம் ஒரு நிா்வாகியை தில்லி அரசு நியமித்தது. ஆனாலும், சட்டபூா்வமாக வாரியம் இன்னும் உருவாக்கப்படவில்லை என்று மனுதாரா் தரப்பில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
வாரியம் முறைப்படி அமைக்கப்படாததால், தலைநகரில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான வக்ஃப் சொத்துகள் ஆக்கிரமிப்பு, சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் தவறான பயன்பாட்டுக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வக்ஃப் கட்டுப்பாட்டில் வரும் பள்ளிவாசல்கள், கல்லறைகள் (கபா்ஸ்தான்), கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவை பராமரிப்பற்ற நிலைக்கு தள்ளப்படுவதாகுவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.