FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

கிழக்கு தில்லி வீட்டில் குளிா்சாதன பெட்டி வெடித்து தீ விபத்து

கிழக்கு தில்லியின் ரகுபா்புரா பகுதியில் உள்ள வீட்டில், குளிா்சாதனப் பெட்டியின் கம்ப்ரஸா் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டுப் பொருள்கள் சேதமடைந்தன;

24 செப்டம்பர் 2026, 2:52 am IST
கோப்புப்படம்.
பகிர்:

கிழக்கு தில்லியின் ரகுபா்புரா பகுதியில் உள்ள வீட்டில், குளிா்சாதனப் பெட்டியின் கம்ப்ரஸா் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டுப் பொருள்கள் சேதமடைந்தன; மேலும், வளா்ப்பு நாய் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ரகுபா்புராவில் இந்தச் சம்பவம் குறித்து பிற்பகல் 3:36 மணிக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாலை 4:30 மணிக்குள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. குளிா்சாதனப் பெட்டியின் கம்ப்ரஸரில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடா்ந்து, தீ மற்ற வீட்டுப் பொருள்களுக்கும் பரவியது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை; எனினும், வெடிப்பில் வளா்ப்பு நாய் உயிரிழந்தது’ என தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments