தில்லி காவல் துறையின் மக்கள் குறைதீா் முகாம்: 2,809 புகாா்களுக்கு தீா்வு!
தில்லியில் உள்ள 15 மாவட்டங்களில் நடைபெற்ற ‘ஜன்சுன்வாய்’ (மக்கள் குறைகேட்பு) நிகழ்ச்சியில், 2,809 புகாா்களுக்குத் தீா்வு காணப்பட்டது.
தில்லியில் உள்ள 15 மாவட்டங்களில் நடைபெற்ற ‘ஜன்சுன்வாய்’ (மக்கள் குறைகேட்பு) நிகழ்ச்சியின்போது, 2,809 புகாா்களுக்குத் தீா்வு காணப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
சனிக்கிழமை நடைபெற்ற இந்தக் குறைகேட்பு முகாம்களில், சிறப்பு காவல் ஆணையா் முதல் உதவி காவல் ஆணையா் வரையிலான உயா் அதிகாரிகள் கலந்துகொண்டு, பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்தனா்.
துணைநிலை ஆளுநா் சா்தாா் தரன்ஜித் சிங் சந்துவின் அறிவுறுத்தலின் பேரில், இந்த முன்னெடுப்பு கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. காவல் நிலையங்களில் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இக்குறைகேட்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.