FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: அதிமுக மகளிர் அணி ஆலோசனை

நாகர்கோவிலில் இம்மாதம் 22 ஆம் தேதி நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில்   அக்கட்சியின் மகளிர் அணியினர்

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

நாகர்கோவிலில் இம்மாதம் 22 ஆம் தேதி நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில்   அக்கட்சியின் மகளிர் அணியினர் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை ( செப்.22)  எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இதையொட்டி,  அதிமுக மாவட்ட மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலிலுள்ள மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில்  புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு,  குமரி கிழக்கு மாவட்டச் செயலர் எஸ்.ஏ.அசோகன்    தலைமை வகித்தார். மாவட்ட மகளிர் அணிச்செயலர் டாரதி சாம்சன், குமரி மேற்கு மாவட்டச் செயலர் ஜான்தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், விஜிலாசத்யானந்த் எம்.பி. ஆற்றிய சிறப்புரை:
அதிமுகவின் நிறுவனர்- தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டுள்ளது.  குமரியிலும் விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலர் அசோகன் செய்துவருகிறார். 
 எம்ஜிஆர், ஜெயலலிதாவை போல, தற்போதைய தமிழக அரசும் மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அந்த வகையில் இம்மாதம் 22 ஆம் தேதி நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பெண்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும். அதற்கான பணிகளை மகளிர் அணியினர் இப்போதிருந்தே தொடங்கி,  நூற்றாண்டு விழா சிறக்க உழைக்க வேண்டும்.
அதேபோல், தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு மகளிர் முன்மாதிரியாக இருந்து செயல்பட வேண்டும். அதிமுக அரசின் மகளிர் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று, அவர்களை அதிமுகவுக்கு வாக்களிக்க வைப்பதில் மகளிர் அணி பங்கு முக்கியம் என்றார் அவர்.
கூட்டத்தில்,  அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவருமான ஏ.ஜஸ்டின் செல்வராஜ்,  மகளிர் அணி நிர்வாகிகள் மேரி கமலபாய், ஹெப்சிபா, சாந்தி அலெக்ஸ், பாக்கியலட்சுமி, ஜெயந்தி, மேரி, சரோஜ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments