நித்திரவிளை அருகே 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
நித்திரவிளை அருகே காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.
நித்திரவிளை அருகே காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.
குமரி மாவட்ட பறக்கும்படை தனி வட்டாட்சியர் ராஜசேகர், தனித் துணை வட்டாட்சியர் முருகன், தனி வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நித்திரவிளை அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்த சைகை காட்டினர். ஆனால், ஓட்டுநர் காரை சற்று தொலைவிலுள்ள நம்பாளி பகுதியில் நிறுத்திவிட்டு தப்பி விட்டாராம்.
இதையடுத்து, காரை அதிகாரிகள் சோதனை செய்ததில், பாலித்தீன் சாக்கு மூட்டைகளில் 700 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததும், அவை கேரளத்துக்கு கடத்திச் செல்லவிருந்ததும் தெரியவந்தது. காருடன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், ரேஷன் அரிசி காப்புக்காடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.