FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் ரத்து கோரி நாகர்கோவிலில் காங்கிரஸ் பேரணி, ஆர்ப்பாட்டம்

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்ததில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும்

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்ததில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரியும் நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தினர். 
 நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் நடைபெற்ற பேரணிக்கு, குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்குரைஞர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பேரணி  நீதிமன்ற சாலை, டதி பள்ளி சந்திப்பு, வழியாக மாவட்டஆட்சியர் அலுவலகத்தை அடைந்தது. பின்னர் அங்கு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான சஞ்சய்தத் சிறப்புரையாற்றினார். இதில், மாநிலச் செயலர் அருள்பெத்தையா,  எம்எல்ஏக்கள் வசந்தகுமார், விஜயதரணி, பிரின்ஸ், ராஜேஷ்குமார்,   மகேஷ்லாசர், மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி தங்கம் நடேசன்,  நாகர்கோவில் நகரத் தலைவர் அலெக்ஸ்,  வட்டாரத் தலைவர்கள் ஜெரால்டு கென்னடி, காலபெருமாள், ராஜஜெகன், செல்வராஜ் உள்பட திரளான காங்கிரஸார் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments