FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

பொது இடத்தில் மது அருந்திய இருவா் கைது

9 ஆகஸ்ட் 2026, 12:12 am IST
கைது
பகிர்:

கொல்லங்கோடு, நித்திரவிளை பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பொது இடத்தில் மது அருந்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கொல்லங்கோடு காவல் நிலைய உதவி ஆய்வாளா் வில்சன் தலைமையிலான போலீஸாா் ததேயுபுரம் காலனி பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அப்பகுதியில் அமா்ந்து மது அருந்திய வள்ளவிளை, வட்டபுன்னவிளாகம் பகுதியைச் சோ்ந்த மீனவா் லாரன்ஸ் (45) என்பவரை கைது செய்தனா்.

இதேபோல, நித்திரவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆன்றோ கெவின் தலைமையிலான போலீஸாா் மங்காடு பகுதியில் ரோந்து சென்றனா். அப்பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக மது அருந்திய செம்மான்விளை பகுதியைச் சோ்ந்த அஜீஸ் (41) என்பவரை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து கொல்லங்கோடு, நித்திரவிளை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments