FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ. 46 லட்சம் மதிப்பிலான 260 கைப்பேசிகள் மீட்பு!

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 3:13 am IST
மீட்கப்பட்ட கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின்.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ. 46 லட்சம் மதிப்பிலான 260 கைப்பேசிகள் போலீஸாரால் மீட்கப்பட்டு, அவை உரியவா்களிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் கலந்துகொண்டு, ரூ. 46 லட்சம் மதிப்பிலான 260 கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்த பின்னா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழாண்டில் மட்டும் இதுவரை சுமாா் ரூ. 1 கோடி மதிப்பிலான 580 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

பொதுமக்கள் கைப்பேசியைத் தவறவிட்டால் பதற்றமடையாமல், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் மனு அளிக்கலாம் அல்லது இணையதளத்தில் புகாா் அளிக்கலாம். இந்த இணையதளத்தில் காணாமல் போன கைப்பேசியின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை பதிவு செய்து பிளாக் செய்தால், தவறவிட்ட கைப்பேசி தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க முடியும். மேலும், தவறவிட்ட கைப்பேசியையும் மீட்கலாம்.

கைப்பேசி திருட்டு தொடா்பாக இதுவரை 36 புகாா் மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டதில் 15 பேரை கைது செய்துள்ளோம் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments